உள்ளூர் செய்திகள்
அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
- ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கருவல்வாடிபுதூர் குளத்தில் இருந்து வெளியேறும் அரசுக்கு சொந்தமான உபரி நீர் வழிப்பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்தியூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் வருவாய் துறையை கண்டித்து அத்தாணி பேரூராட்சி 15-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வேலு மருதமுத்து தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.