விதிமுறைகளை மீறும் விதை உற்பத்தியாளர்கள் மீது புகார் அளிக்கலாம்
- நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- விதிமீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன நீர் பகுதிக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.கோபி, டி.என்.பாளையம் உட்பட பல பகுதிகளில் குறுவை நெல் சாகுபடி 25,000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனைத்தொடர்ந்து குறுவை நெல் சாகுபடி குறித்து, இப்பகுதி நெல் விதை உற்பத்தியாளர்களு க்கும், விதை விற்பனை யாளர்களுக்கும் தீவிர விழிப்புணர்வு வழங்க, நெல் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
குறுவை நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள், ஏற்ற நெல் ரகங்கள், அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பரிந்து ரைக்கப்பட்ட இப்பரு வத்துக்கு ஏற்ற குறுகிய கால ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய யோசனை தெரிவிக்க ப்பட்டுள்ளது.
ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
விதை விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்கும்போது, விவசாயி கள் தரமான சான்று பெற்ற விதைகளை பார்த்து வாங்க வேண்டும். அதன் காலாவதி நாளை கவனித்து வாங்க வேண்டும். விதை விற்பனை யாளரிடம் இருந்து விற்பனை க்கான பில் பெற வேண்டும்.
விதை விற்பனை யாளர்கள் விதைகளை விற்பனை செய்யும்போது, பட்டத்துக்கு ஏற்ற விதை களை விற்பனை செய்வது டன், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
உரிய ஆவணங்கள் இன்றி விதை விற்பனை செய்வது விதை சட்டம் மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணைப்படி விதி மீறலாகும். விதிமீறும் விதை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதைகள் குறித்த புகார்களை கோபி விதை ஆய்வாளர் சுமையா, 99448 43823 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.