உள்ளூர் செய்திகள்

பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

பட்டப்பகலில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு

Published On 2023-07-07 14:57 IST   |   Update On 2023-07-07 14:57:00 IST
  • வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
  • வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை மின்சாரவாரிய குடியிருப்பு அருகில் வேட்டையப்ப கவுண்டர் (73). அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் வசித்து வருகின்றனர். வேட்டை யப்பகவுண்டருக்கு உடல்நிலை சரியில்லாததால் சம்பவத்தன்று காலை மனைவியுடன் அந்தியூர் மருத்துவமனைக்கு சென்றார்.

பின்னர் மதியம் 1.30 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்புற கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து பொருட்கள் சிதறி கிடந்தது.வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதேபோல் அதேபகுதியில் குடியிருந்து வரும் வேலுசாமி (78). அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் காலை அந்தியூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த போது வீட்டின் முன்புற இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து வேலுசாமி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவயி டம் வந்து விசாரணை செய்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்து வீட்டில் இருந்து காவிரி ஆற்று வரை சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பட்டப்பகலில் அடுத்தடுத்து வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News