உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு 19 ஆயிரம் இலவச மரக்கன்றுகள் வழங்க ஒதுக்கீடு

Published On 2022-12-13 09:43 GMT   |   Update On 2022-12-13 09:43 GMT
  • விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.
  • மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண்மை காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விளை நிலங்களில் வரப்புகள் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக மரக்கன்றுகள் நடவு செய்ய இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கொடுமுடி வட்டாரத்திற்கு சந்தனமரம் 2,150, செம்மரம் 6,400 , ரோஸ்வுட் 1,800, மகாகனி 4,800, பெருநெல்லி 1,600, கடம்பு 100, கடுக்காய் 100, வேங்கை 100, நாவல் 300, மருதம் 100, தான்றிக்காய் 100, இலுப்பை 100, புளியமரம் 200, இலவங்கம் 100, வாகை 150, புங்கம் 500, வில்வம் 100, விளாமரம் 100, எட்டி மரம் 100, தூபமரம் 100 என மொத்தம் 19,000 மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் மரக்கன்று களை இலவசமாக பெறுவதற்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரைஅணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம். கொடுமுடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, பரிந்துரை படிவம் பெற்ற பின் அலுவலகத்தில் அறிவிக்கப்படும் நாற்றங்காலில் நேரடியாக சென்று மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News