உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டியில் வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-10-02 15:06 IST   |   Update On 2023-10-02 15:06:00 IST
  • புளியம்பட்டியில் வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
  • இ்துகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

பு.புளியம்பட்டி,

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து உயிலம்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் முருகே சன் மகன் தீபக்குமார் (வயது 24). இவர் சம்ப வத்தன்று நம்பியூர் ரோடு காந்திநகர் பகுதியில் இவரது அப்பா வைத்திருக்கும் பிளாஸ்டிக் கம்பெ னியில் இருந்து தன்னு டைய இருச க்கர வாகனத்தில் புளியம்ப ட்டி நோக்கி வந்து கொண்டி ருந்தார்.அப்போது அவர் காந்தி நகர் மாகாளியம்மன் கோவில் அருகே வரும்போது நம்பியூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேரு ந்து திடீரென எதிர்பாராத விதமாக தீபக் குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.

இதில் அவர் தூக்கி வீச ப்பட்டார். அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு தீபக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். மேலும் இ்துகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News