உள்ளூர் செய்திகள்
கிணற்றுக்குள் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
- 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது.
- தீயணைப்பு வீரர்கள் கயிற்றை பயன்படுத்தி மயிலை உயிருடன் மீட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பசுவபட்டி ஊத்துக்காடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் மயில் ஒன்று தவறி விழுந்து விட்டது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிற்றை பயன்படுத்தி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்த மயிலை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அந்த மயிலை வனத்துறை அலுவலர் சத்தியமூர்த்தியிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.