உள்ளூர் செய்திகள்

15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பெரிய ரக வாகனம்

Published On 2023-04-14 07:51 GMT   |   Update On 2023-04-14 07:51 GMT
  • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய ரக வாகனம் வழங்கப்பட உள்ளது.
  • அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய ங்களுக்கு நவீன உபகர ணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் உடனு க்குடன் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லும் வகையில் அதிநவீன வாகன ங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை பெரிய நகர பகுதியாகும். காரணம் இங்குதான் ஏராளமான தொழிற்சா லைகள் இயங்கி வருகின்றன.

இதில் பெருந்துறை சிப்காட்டில் பல்வேறு ரசாயனம் மற்றும் உற்பத்தி தொழிற்சா லைகள் இருப்பதால் இங்கு தீ விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக அணைக்க தற்போது கூடுதலாக நவீன ரக சிறிய வாகனம் அரசு சார்பில் வழங்கப்ப ட்டுள்ளது.

இந்த புதிய வாகனத்தில் 300 லிட்டர் தண்ணீர், 100 லிட்டர் நுரை கலவை, 2 பம்ப் மற்றும் வாகனத்தின் டிரைவர் கேபின் முழுவதும் ஏசி வசதியுடன் அமைக்க ப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகனம் ஓடும்போதே வீரர்கள் மூலம் தீயை அணைக்கும் வசதி உள்ளது. அதுவும் சோதனை செ ய்தபோது வெற்றியடைந்தது.

இதேப்போல் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட பெரிய ரக வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

அந்த வாகனம் தற்போது ஐதராபாத்தில் பாடி கட்டப்பட்டு வருகிறது. அந்த வாகனத்தில் பயன்படுத்தப்படும் சில வகையான உதிரி பாகங்கள் ஈரோட்டிற்கு வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News