உள்ளூர் செய்திகள்

கடைக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு

Published On 2022-10-05 10:09 GMT   |   Update On 2022-10-05 10:09 GMT
  • மூதாட்டி மரகதவல்லியிடம் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.
  • இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு திண்டல் அடுத்த வித்யா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மரகதவல்லி (62). நேற்று காலை மரகதவல்லி அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பொரு ட்கள் வாங்க சென்றார்.

பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். பின்னால் அமர்ந்திருந்த நபர் திடீரென மரகதவல்லி கழுத்தில் அணிந்திருந்த 2¼ பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்து கொண்ட மூதாட்டி மரகதவல்லி செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். எனினும் மர்ம நபர் 1¼ பவுன் செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்டர் தப்பிவிட்டார்.

இதுகுறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News