உள்ளூர் செய்திகள்

மொபட் மீது டவுன் பஸ் மோதியதில் பில்டிங் கான்ட்ராக்டர் பலி

Published On 2023-11-22 14:49 IST   |   Update On 2023-11-22 14:49:00 IST
  • தனியார் டவுன் பஸ் மொபட்டின் பக்க வாட்டில் மோதியது.
  • இதில் அங்கமுத்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள பெருமாபாளையம், அன்னை கார்டனை சேர்ந்த அங்கமுத்து. (வயது 71). இவர் பில்டிங் கான்ட்ராக்டர்.

சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து பெருந்துறை, பவானி ரோடு, காடபாளையத்தில் பில்டிங் வேலை நடக்கும் இடத்திற்கு தனது மொபட்டில் சென்றார்.

பெருந்துறை யூனியன் ஆபீஸ் அருகில் சென்றபோது அவருக்கு பின்னால் வந்த தனியார் டவுன் பஸ் மொபட்டின் பக்க வாட்டில் மோதியது. இதில் அங்கமுத்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியில் அங்கமுத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News