உள்ளூர் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்ற 3 பேர் கைது

Published On 2023-02-03 09:57 GMT   |   Update On 2023-02-03 09:57 GMT
  • கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • செந்தில்குமார் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கே.என்.கே. ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

அதேபோல மூலப்பட்டறை பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் மூலப்பட்டறை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பதும், 6 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல பெருந்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News