கோபி செட்டிபாளையம் அருகே பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது
- கோபி செட்டிபாளையம் அருகே பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோபி,
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியில் கடத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு மதியவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதை கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் (60) என தெரிய வந்தது. இதையடுத்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து போலீசார் 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். அதே போல் கோபி அடுத்த அக்கரை கொடிவேரி, மாக்கினங்கோம்பை, அரசூர் சந்த ஆகிய பகுதிகளில் போலீசார் நேர்ந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சிலர் பொது இடத்தில் மது குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து அரியப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி (28), மாக்கிங்கோம்பை கவுசிகன் (19) கமலேஷ (19), ஆகிய 3 பேரை பொது இடத்தில் மது குடித்ததாக வழக்கு பதிவு அவர்கள் 3 பேரை கைது செய்தனர்.