உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் 3 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்

Published On 2022-10-01 09:37 GMT   |   Update On 2022-10-01 09:37 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3.06 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
  • மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் மற்றும் கூடுதல் கலெக்டருமான மதுபாலன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3.06 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

இதில் 1.69 லட்சம் பேர் இதுவரை பணிக்கு வருகை புரிகின்றனர். கடந்தாண்டு, 1.22 லட்சம் குடும்பத்தார் பணி பெற்று பயனடை ந்துள்ளனர். நடப்பாண்டில் கடந்த மாதம் 20-ந் தேதி வரை 99,955 குடும்பத்தார் பணி செய்துள்ளனர்.

ஒரு குடும்பத்துக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் 4,826 குடும்பத்துக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு ள்ளது. 404 குடும்பத்தார் 100 நாளை விரைவில் முடிக்க உள்ளனர்.

மனித வேலை நாட்களின் கணக்குப்படி, 108.4 சதவீத பணிகள் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

அதேநேரம் இப்பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் ஊதியம், சராசரியாக 241 ரூபாயாகும். கடந்தாண்டு பணியின் அடிப்படையில் பயனா ளிக்கு குறைந்த பட்சம் 224 ரூபாயும், அதிகப்பட்சம் 255 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், சில பயனாளிகளுக்கு அதிகப்ப ட்சமாக 261 ரூபாய் ஊதி யமாக வழங்கப்பட்டுள்ளது.உரிய காலத்தில் ஊதியம் வழங்குவதில் நமது மாவட்டம் 91.96 சதவீதமாக உள்ளது. ஆன்லைனில் மூலம் அந்தந்த பயனாளியின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதால் குறைபாடுகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News