உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்றதாக 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Published On 2022-08-11 10:13 GMT   |   Update On 2022-08-11 10:13 GMT
  • கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய மாவட்ட முழுவதும் 46 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
  • சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மேற்பா ர்வையில் அனைத்து உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் சம்மந்தப்ப ட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் கஞ்சா உபயோகப்படுத்து வதால் ஏற்படும் தீமைகள், அதனை விற்பனை செய்வோர் மீது எடுக்கப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைககள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய மாவட்ட முழுவதும் 46 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 157 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 116 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 206 ேபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் முழுமையாக கஞ்சா விற்பனையை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News