உள்ளூர் செய்திகள்

அதிக விலைக்கு மது விற்ற 2 பேர் கைது

Published On 2022-12-29 12:51 IST   |   Update On 2022-12-29 12:51:00 IST
  • பவானி பழைய பாலம் அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
  • கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பவானி:

பவானி பழைய பாலம் அருகில் பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மறைவான இடத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பவானி கல்தொழிலாளர் மூன்றாவது வீதியில் வசிக்கும் கண்ணன் (23) என்பது தெரிய வந்தது அதிக விலைக்கு மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் பவானி அந்தியூர் மெயின் ரோடு பண்டாரப்பச்சி கோவில் பின்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் வைத்துக் கொண்டு விற்பனை செய்த குற்றத்திற்காக கல் தொழிலாளர் 1-வது வீதியில் வசிக்கும் பிரபாகரன் (31) என்பவர் கைது செய்யப்பட்டு 13 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News