உள்ளூர் செய்திகள்

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-12-21 09:59 GMT   |   Update On 2022-12-21 09:59 GMT
  • ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
  • போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோடு:

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சத்திரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஒருவர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 780 மதிப்பிலான 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல சத்தியமங்கலம் போலீசார் பண்ணாரி ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டி ருந்தனர். அப்போது உதையா மரத்து மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடை பெற்றது தெரியவந்தது.

உடனடியாக அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அம்பலவாந்தல் பகுதியை சேர்ந்த அன்பரசு (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ரூ.1,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News