உள்ளூர் செய்திகள்

1,387 வீடுகளுக்கு தனிநபர் கழிப்பறை கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Published On 2022-09-30 10:05 GMT   |   Update On 2022-09-30 10:05 GMT
  • பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட திட்ட வீடுகளுக்கு தனியாக 12,000 ரூபாய் வழங்கி கழிப்பறை கட்ட உதவுகின்றனர்.
  • பஞ்சாய த்துகளின் கோரிக்கை ஏற்று, 31 இடங்களில் சுகாதார வளாகம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தை பொது இடத்தில் மலம் கழித்தல் இல்லாத மாவட்ட மாக மாற்றும் முயற்சியாக, அனைத்து நகரம், கிராமப்புற ங்களிலும் உள்ள வீடுகளில் தனி நபர் கழிப்பறை கட்ட அரசு சார்பில் ரூ.12 ஆயிரம் வழங்கி வருகிறது.

மாவட்டத்தில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் கழிப்பறை இருப்பதை உறுதி செய்யப்பட்டு வரு கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலம் கட்டப்படும் பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட வீடுகளுக்கு தனியாக 12,000 ரூபாய் வழங்கி கழிப்பறை கட்ட உதவுகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் கிராம, நகரப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடு ப்பின்படி, 2,570 வீடுகளில் தனி நபர் கழிப்பறை இல்லை என்பதை அதிகாரி கள் உறுதி செய்தனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறிய தாவது:

தனி நபர் கழிப்பிடம் குறித்து மாநில அரசிடம் தெரிவித்து, 2,570 வீடு களிலும் தனி நபர் கழிப்பறை கட்ட தலா, 12,000 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு கோரி னோம். முதற்கட்டமாக, 1,387 வீடுகளுக்கு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொள்ள நிர்வாக அனுமதி வழங்க ப்பட்டுள்ளது.

விரைவில் நிதி ஒதுக்கீடு பெற்று வழங்கி, கழிப்பறை கட்ட ப்படும். மீதமுள்ள வீடுகளுக்கு அடுத்த கட்டமாக நிதி பெற்று கழிப் பறை கட்ட நிதி வழங்க ப்படும்.

மேலும் பஞ்சாய த்துகளின் கோரிக்கை ஏற்று, 31 இடங்களில் சுகாதார வளாகம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 13 இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. அதில், 4 பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள, 9 பணிகள் விரைவில் நிறைவு பெறும்.

தற்போது 2022–-23-ம் ஆண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், 6 இடங்களில் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அதற் கான பணிகள் தொடங்க ப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News