காற்று மாசுபாட்டைத் தவிர்க்க 13 ஒன்றியங்களில் 126பேட்டரி குப்பை வண்டிகள்
- காற்று மாசுபாட்டைத் தவிர்க்க 13 ஒன்றியங்களில் 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கபட்டுள்ளன
- ஈரோடு மாவட்டத்தில் நட ப்பு ஆண்டில் ரூ.4.24 கோடி மதிப்பில், 221 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்க திட்டமிடப்பட்டது
ஈரோடு,
ஈரோடு மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில், குப்பைகளை அகற்ற லாரி, டிராக்டர் மற்றும் மினி ஆட்டோ வடிவிலான சிறிய வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பய ன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றால் எரிபொருள் மற்றும் கூடுதல் பராமரிப்பு செலவு ஏற்பட்டு வந்தது. இச்செலவை தவிர்க்கவும், காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கிலும் மின்கல (பேட்டரி) குப்பை வண்டிகள் மாநகராட்சிகள், நகராட்சிகளில் பயன்ப டுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஈரோடு மாவட்டத்தில் நட ப்பு ஆண்டில் ரூ.4.24 கோடி மதிப்பில், 221 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்க திட்டமிடப்பட்டது.ஊரக வளர்ச்சி துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் தாளவாடி தவிர மற்ற 13 ஒன்றியங்க ளிலும் இந்த குப்பை வண்டி கள் வாங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:- தாளவாடி ஒன்றியம் முற்றிலும் மலை ப்பகுதியாக உள்ளது.
அங்கு பேட்டரியில் சார்ஜ் செய்து, மின்கல வண்டியை, குப்பை லோடு ஏற்றி இயக்குவது சிரமம் என்ப தால், அந்த ஒன்றியத்துக்கு மட்டும் பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கவில்லை. தாளவாடி நீங்கலாக, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட 13 ஒன்றியங்க ளிலும் தேவையின் அடிப்ப டையில் முதல்கட்டமாக 221 பேட்டரி வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இதில் தற்போது 126 பேட்டரி குப்பை வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.
மொத்தம் ரூ.2.42 கோடியில் இந்த வாகனங்கள் வாங்க ப்பட்டு தற்போது பயன்பா ட்டில் உள்ளன. குறிப்பாக ஈரோடு ஒன்றி யத்தில் –8, மொடக்குறிச்சி-32, கொடுமுடி-17, பெருந்து றை-20, அம்மாபேட்டை-10, அந்தியூர்-8, கோபி-11, டி.என்.பாளையம்-10, பவானிசாகரில்-10 வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 95 வண்டிகள் குப்பைகள் அள்ளுவதற்கு ஏற்றவாறு அதன் கட்டமைப்பில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவை பயன்பா ட்டுக்கு வரும்.
இதன் மூலமாக எரிபெ ாருள் செலவு மிச்சமாகிறது. மின்சாரத்தில் சார்ஜ் செய்வதால், பெரிய செலவு ஏற்படுவதில்லை. கூடுதல் தூரம் பயணிப்பதால் எரி பொருள் செலவும் அதிகரி க்காது. முக்கியமாக காற்று, ஒலி மாசுபாடு ஏற்பாடாது. டிரைவர்களும், இதுபோன்ற வாகனங்களை இயக்க விருப்பம் தெரிவிக்கி ன்றனர். நம் மாவட்டத்தில், ஏற்கனவே மாநகராட்சி, சில நகராட்சிகளில் குறைந்த எண்ணிக்கையில், இதுபோன்ற பேட்டரி குப்பை வண்டிகள் செய ல்பாட்டில் உள்ளன.
தற்போ து பயன்பாட்டில் உள்ள பெட்ரோல், டீசல் வாக னங்களை மாற்றும்போது, அதற்கு பதிலாக வரும் காலங்களில் இதுபோன்ற மாசற்ற, எரிபொருள் செ லவற்ற பேட்டரி வண்டி களை வாங்க ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.