உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி இன்று காலை கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட காட்சி. 

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-08-07 09:05 GMT   |   Update On 2023-08-07 09:05 GMT
  • இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது.
  • வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது.

ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்பது பெரு வணிக தலமாகும். இங்குள்ள நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை திருவிழா 11 நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

இந்நிலையில் இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொடிப்பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொணடு சுவாமியே தரிசனம் செய்தனர்.

வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 1-ம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவிலின் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்த பாண்டியன் நாடார் செய்திருந்தார்.

Tags:    

Similar News