உள்ளூர் செய்திகள்
நெடுமானூர் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நெடுமானூர் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
- நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- ஊர்வளத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் நெடுமானூர் காலனி பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிட்டிபாபு வரவேற்றார். அரசின் பிரச்சார வாகனம் ஊரைச்சுற்றி பிரச்சாரம் செய்தது. இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மாணவர் சேர்க்கை முழக்கங்களை முழங்கினார். ஊர்வளத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்,பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.