உள்ளூர் செய்திகள்

தி.மு.க. எம்.பி. கல்யாண சுந்தரம்.

மத்திய அரசின் ெரயில்வே, பெல் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்கி தரவேண்டும்

Published On 2022-12-22 15:18 IST   |   Update On 2022-12-22 15:18:00 IST
  • நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
  • மத்திய அரசு தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும்.

கும்பகோணம்:

நாடாளுமன்ற மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்ட த்தொடரில் தி.மு.க. எம்.பியான கே.கல்யாணசுந்தரம் பேசியதாவது:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மகாமகம் அடுத்த 2028-ல் நடைபெற உள்ளது.

பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான ரயில்வே பாதை விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

அதேபோல் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் பாதையை புதுப்பிக்கும் கோரிக்கையும் சென்னை-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனை உடனே முடிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு நிறுவனங்களான ெரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலமாக கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News