உள்ளூர் செய்திகள்

12 ஆண்டு நீடித்த வழக்கில் பணியாளர் இழப்பீடு ஆணையம் தீர்ப்பு: ரூ.9.14 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Published On 2023-07-31 20:38 IST   |   Update On 2023-07-31 20:38:00 IST
  • வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரித்தனர்.
  • தேனாம்பட்டை பணியாளர் இழப்பீடு ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனி பகுதி சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (17). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பாலைவனம் அடுத்த பாக்கம் கிராமத்தில் தனியார் இறால் வளர்ப்பு பண்ணையில் காகம் விரட்டும் பணி செய்து வந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென 6/9/2010 அன்று இறந்துவிட்டதால் இதுகுறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் பொன்னேரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்ததால் உறவினர்கள் ஆர்டிஓ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் விஷத்தன்மையுடன் கலந்த உணவு சாப்பிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பாலகிருஷ்ணனின் தந்தை கொள்லானுர்சிங், சிபிஐ விசாரிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து இழப்பீடு வேண்டி தேனாம்பட்டை பணியாளர் இழப்பீடு ஆணையம் 11-ல் வழக்கு தொடர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, இழப்பீடு தொகையாக 9 லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய் வழங்க உத்தரவிட்டு இழப்பீடு ஆணையம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் கார்த்திகேயனை பொன்னேரி நீதிமன்றம் முன்பு நரிக்குறவர்கள் குடும்பமாக வந்து மலர் மாலையிட்டு ஊசிமணி பாசி மாலை வழங்கி ஆடல் பாடலுடன் நன்றி தெரிவித்தனர். 

Similar News