காதலித்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
- பி.இ படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
- வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள வரகூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.இவரது மனைவி பழனியம்மாள் (வயது 46).இவருக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
இவருடைய முதல் மகன் தங்கமணி. இவர் பி.இ படித்து முடித்துவிட்டு கோயம்புத்தூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அங்கு வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் இருவரிடையே ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக அந்த பெண் தங்கமணியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தங்கமணி வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
உடனேஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கமனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது அம்மா பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.