உள்ளூர் செய்திகள்

தேன் வயலில் வாழை, பாகற்காய் தோட்டங்களை சேதப்படுத்திய யானைகள்

Published On 2023-02-20 14:38 IST   |   Update On 2023-02-20 14:38:00 IST
  • காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது.
  • வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,

ஊட்டி,

கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் வறட்சியான காலநிலை தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது

கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தேன் வயல் பழங்குடி கிராம மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதிக்கு வந்த யானைகள் பாகற்காய் தோட்டம் மற்றும் வாழைதோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகள் இரவு முழுவதும் அங்கு நடமாடியதால் விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்

எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை காலம் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வருகிறது.இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.  

Tags:    

Similar News