உள்ளூர் செய்திகள்

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ரோட்டை கடந்து சென்ற யானைகளால் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்

Published On 2023-03-19 09:59 GMT   |   Update On 2023-03-19 09:59 GMT
  • சுற்றுலாபயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்
  • யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது.

ஊட்டி,

வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் சுட்டெரிப்பதால் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகின்றன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளை யம் சாலையில் யானைகள் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி கடந்து செல்வதை காண முடிகிறது. நேற்றும் இதேபோல யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்க முயன்றன.

இதனால் இருபுறமும் வா கனங்கள் நிறுத்தப்பட்டன. நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நின்றன. ஆனால் யானைகள் சாலையிலேயே நின்று கொண்டிருந்தன.

அதனை கடப்பதாக தெரியவில்லை. இதுபற்றி அறிந்த வனச்சரகர் சசிக்குமார் தலைமையில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் யானை யை காட்டுப்ப குதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டேரி பகுதி வழியாக யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பிறகே வாகனங்கள் அனு மதிக்கப்பட்டன. இதனால் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

சமவெளி பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டுயானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீர் தேடி காட்டுயானைகள் சாலை கடந்து மலை ரயில் பாதையில் முகாமிடுகிறது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட தால் காட்டு யானைகள் காட்டேரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது உடனடியாக குன்னூர் வனசரகர் சசிக்குமார் தலைமையில் வந்த வனத்துறையினர் காட்டுயானையை அருகேயுள்ள வனப்பகுதிக்கு விரட்டினர் இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News