உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தாண்டிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம்

Published On 2023-04-04 05:37 GMT   |   Update On 2023-04-04 05:37 GMT
  • காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
  • காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பெருங்கானல், மங்களம்கொம்பு, தடியன்குடிசை, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் சம்பவத்தன்றுஇரவு பெருங்கானலை சேர்ந்த விவசாயியான கரியமங்களம், சோனைமுத்து, மணிவண்ணன், என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்தன. அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, போன்ற வற்றை நாசம் செய்தன.

பின்னர் அந்த வழியாக வந்த காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே பெருங்கானல் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News