உள்ளூர் செய்திகள்

பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தமிழகத்தில் மின் நுகர்வு 1000 மெகாவாட் குறைந்தது

Published On 2023-04-29 05:41 GMT   |   Update On 2023-04-29 05:41 GMT
  • கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
  • கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மாதத்தில் மின் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்ததால் மின் தேவையும் உயர்ந்தது.

வெப்பத்தை தாங்க முடியாமல் பலர் ஏ.சி.யை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பல வீடுகளில் கோடை வெயிலை சமாளிக்க இரவில் ஏ.சி.யை தற்போது உபயோகிக்கிறார்கள்.

இதனால் மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 19 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது.

கோடையில் மின் தேவை அதிகரித்த போதும் தட்டுப்பாடு இல்லாமல் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு குறைந்து வருகிறது. இது தவிர கோவை, ஈரோடு மாவட்டங்களிலும் மழை பெய்ததால் மின் நுகர்வு குறைந்துள்ளது. 1000 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு குறைந்து இருப்பதாக மின் வாரியம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து மின் பகிர்மான உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் மழை பெய்வதால் மின் நுகர்வு உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. தரவு மையங்கள் அதிகரிக்கிறது. ஏப்ரலை விட மே மாதத்தில் மின் நுகர்வு குறைய வாய்ப்பு உள்ளது.

மே மாதத்தில் கோடை மழை பெய்யும் என்பதால் மின் நுகர்வு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. தற்போது 18 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News