உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-08 15:34 IST   |   Update On 2022-08-08 15:34:00 IST
  • மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது.
  • மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

பொள்ளாச்சி:

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து இன்று பொள்ளாச்சி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில அரசுகளின் உரிமையை அடியோடு பறிக்கப்படும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிபோகும் நிலை ஏற்படும்.

எனவே இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News