உள்ளூர் செய்திகள்
- வீட்டில் இருந்து தரைவழியாக கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.
- மகாலிங்கம் ஆட்டுகொட்டகையில் குழி தோண்டி உள்ளார்.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டி அருகே சேகல் மடப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது63). நேற்று காலை இவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டுகொட்டகையில் குழி தோண்டி உள்ளார்.
அப்போது வீட்டில் இருந்து தரைவழியாக கொட்டகைக்கு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனை அறியாத மகாலிங்கம் கடப்பாரையால் குழி தோண்டியபோது எதிர்பாராதவிதமாக மின்வயர் மீது பட்டது.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் இறந்தார். தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.