உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

Published On 2023-10-04 15:12 IST   |   Update On 2023-10-04 15:12:00 IST
  • பென்னாகரம் ரோட்டில் ஆட்டுக்காரம்பட்டி அருகே நடந்து வந்தார்.
  • இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த எர்ரபையனஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கருபையன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (70). இவர் தனது மருமகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு தருமபுரி-பென்னாகரம் ரோட்டில் ஆட்டுக்காரம்பட்டி அருகே நடந்து வந்தார்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சின்னசாமி உயிரிழந்தார்.

இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News