உள்ளூர் செய்திகள்
- ராஜன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருவங்காடு,
குன்னூர் வண்ணாரபே ட்டையை சேர்ந்தவர் ராஜன்(61). இவர் கடந்த 5 வருடங்களாக தனது மனைவியை பிரிந்து மகன் வீட்டில் வசித்து வந்தார். மனைவியை பிரிந்ததால் மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.