உள்ளூர் செய்திகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

Published On 2023-03-01 15:28 IST   |   Update On 2023-03-01 15:28:00 IST
  • நோட்டுப் புத்தகம், திருக்குறள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.
  • தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சந்திரப்பட்டி பஞ்சாயத்து வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இருளர் இன மாணவ ர்களுக்கு கல்வி உபகரண ங்கள் நோட்டுப் புத்தகம், திருக்குறள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.

இதில் அண்ணாமலை, ராமு, கீதா, சத்தியவாணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத்தலைவி சரண்யா, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் சரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பள்ளி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News