உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.,வை முழுவதுமாக ஒழித்து விடுவார் எடப்பாடி பழனிசாமி : ஓசூரில் பெங்களூர் புகழேந்தி பேட்டி

Published On 2023-10-07 15:17 IST   |   Update On 2023-10-07 15:17:00 IST
  • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க வை முழுவதுமாக ஒழித்து விடுவார் என்று பெங்களூர் புகழேந்தி தெரிவித்தார்.
  • எடப்பாடி பழனிசாமி திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று இரவு நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க (ஓ.பன்னீர்செல்வம் அணி) கொள்கைபரப்பு செயலாளர் பெங்களூர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதா வது:- ஏற்கனவே, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களை முதுகில் குத்திய எடப்பாடி பழனி சாமி பற்றி தற்போது தான் பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு தெரிய வந்துள்ளதா? முதன் முதலாக, பா.ஜனதா கட்சியை பின்னாலிருந்து முதுகில் குத்திய ஒரே மனிதர் எடப்பாடி பழனி சாமி தான். அந்த கட்சியே, நிலை தடுமாறும் அளவிற்கு அவர்களது முதுகில் எடப்பாடி பழனிசாமி பலமாக குத்தியுள்ளார்.

திமுகவுக்கும், அதிமுக வுக்கும் தான் போட்டி எனக் கூறிவரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு, திமுகவை எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டில் அவர்களிடத்தில் தற்போது என்ன பலம் இருக்கிறது? ஏற்கனவே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்து கட்ட மைப்பு சீராக இருந்த ஒரே தொகுதியான தேனி யில் மட்டும் ஓபிஎஸ் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

தற்போது, கட்சி பிளவு பட்டுள்ள சூழ்நி லையில் இவர்களிடம் என்ன கட்டமைப்பு உள்ளது? எடப்பாடி பழனி சாமியும், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் ரகசிய உடன்பாட்டில் உள்ளனர். எனவே தான் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கட்சி யை காட்டி கொடுத்து விட்டதுடன்,தற்போது அதிமுக என்ற கட்சியை முழுவதுமாக ஒழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

மேலும் தற்போ துள்ள அதிமுக இரண்டாக பிளவுபட்டு, வேலுமணி போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமியிடமிருந்து வெளியேறப் போகிறார்கள். இதனை சாதகமாக்கிக் கொண்டு, அதிமுகவிலிருந்து சுமார் 28 எம். எல். ஏ.க்களை பா.ஜனதா கட்சியினர்தங்கள் வசம் நிச்சயம் இழுத்து விடுவார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை புறம்தள்ளி, எடப்பாடி பழனிசாமியை நம்பி, அவர் முதுகில் குத்தியதை இன்னும் சரி செய்ய முடியாத சூழலில் நிலை தடுமாறி, புரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பா.ஜனதா தலைவர்களில் அண்ணாமலையும் ஒருவர். இவ்வாறு புகழேந்தி நிருபர்க ளிடம் கூறினார். 

Similar News