உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த மக்களை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குவியும் மக்கள்

Published On 2022-09-12 07:17 GMT   |   Update On 2022-09-12 07:17 GMT
  • மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் தற்போது வழக்கத்தை விட அதிக அளவில் காய்ச்சல் பரவி உடல்நிலை பாதிக்கப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திரண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடந்த சில தினங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலானோருக்கு வரும் காய்ச்சல் உடனடியாக சரியாக வில்லை.

அதற்கு மாறாக காய்ச்சல் காரணமாக பரிசோதனை மேற்கொண்டால் பலருக்கு வைரல், டைபாய்டு, டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது என்பது தெரியாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று மாத்திரை உட்கொண்டு வருவதை காண முடிகிறது. மேலும் தற்போது பரவக்கூடிய இந்த காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சலின் வீரியம் குறையாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தால் மட்டுமே காய்ச்சலின் வீரியம் குறைந்து வருகின்றது.

இது மட்டும் இன்றி ஒரு வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவருக்கும் எளிதாக காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் சற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது சில தினங்களாக தொடர் மழையும், காலை நேரங்க ளில் வெயில் அடித்து வருவதால் சீதோசனம் மாற்றம் காரணமாக இந்த காய்ச்சல் பரவுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியாமல் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

இது மட்டும் இன்றி காய்ச்சல் ஏற்பட்ட வர்களுக்கு சளி, இரும்பல் போன்ற நோய்களும் ஏற்பட்டு அவதியடைந்து வருவதை யும் காணமுடிகிறது. இந்த நிலையில் இன்று காலை கடலூர் அரசு மருத்துவ மனையில் காய்ச்சல் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்றுக் கொண்டு சிகிச்சை க்காக காத்துக் கொண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் இதுபோன்ற காய்ச்சல் திடீரென்று அதிகரித்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை தனி கவனம் செலுத்தி அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து குடிக்கும் தண்ணீரில் பிரச்சனையா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணமா? என்பதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News