நிலத்தகராறு காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்
- கடந்த 9-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- வெங்கடேஷ் தரப்பினரும் தாக்கியாதாக முனிகிருஷ்ணா மகன் எல்லப்பா போலீசில் புகார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சப்படி திருமால்கவுனிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (51).
இவர் அதே பகுதியைச் சேர்ந்த முனிகிருஷ்ணா எனபவரிடம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 1.3 ஏக்கர் நிலம் வாங்கினார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது முனிகிருஷ்ணா, அவரது மகன் எல்லப்பா (35), உறவினர்கள் மூர்த்தி, சிவக்குமார், கணேசன் ஆகியோர் வெங்கடேஷை தாக்கினார். இதில் காயமடைந்த வெங்கடேஷ் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று வெங்கடேஷ் தரப்பினரும் தாக்கியாதாக முனிகிருஷ்ணா மகன் எல்லப்பா போலீசில் புகார் தெரிவித்தார். இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எல்லப்பன், மூர்த்தி, சிவக்குமார், வெங்கடேஷ், லோகேஷ், சதீஸ் ஆகியோர் 6 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் வெங்கடேசை தாக்கிய கணேசனை மட்டும் போலீசார் கைது செய்தனர்.