உள்ளூர் செய்திகள்
விளை நிலங்களில் மழைநீர் தேங்கியிருக்கும் காட்சி.
கால்வாய் வசதி இல்லாததால் சூளகிரி-பேரிகை சாலையில் ஆறாக ஓடும் மழைநீர்
- வீட்டு மனைகள், விளை நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
- சூளகிரி -பேரிகை சாலையில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் மழை நீர் ஓடி சாலை சேதமடைகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரங்களில் சில நாட்களாக மாலை வேலைகளில் மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி வருகிறது.
நேற்று மாலை முதல் விடிய விடிய நல்ல மழை பெய்ததால் சூளகிரி-பேரிகை சாலை பகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியிலும் குடியிருப்பு முன் பகுதி ஓரமாக உள்ள நர்சரி, வீட்டு மனைகள், விளை நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
சூளகிரி -பேரிகை சாலையில் கழிவு நீர் கால்வாய் இல்லாததால் மழை நீர் ஓடி சாலை சேதமடைகிறது. இந்த சாலையில் கழிவு நீர் கால்வாய் உடனே கழிவு நீர் கால்வாய் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.