உள்ளூர் செய்திகள்

வரத்து அதிகரிப்பால் பரமத்திவேலூரில் தர்பூசணி விற்பனை ஜோர்

Published On 2023-05-01 09:59 GMT   |   Update On 2023-05-01 09:59 GMT
  • கோடை காலம் தொடங்கி விட்டநிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூ சணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது.

பரமத்திவேலூர்:

கோடை காலம் தொடங்கி விட்டநிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இரு சக்கர வாகனத்திலும், நடந்தும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலில் இருந்து தப்பிக்க வெள்ளரி மற்றும் தர்பூசணி பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சுற்று வட்டார பகுதி களில்நிலவும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இதனால், கோடை வெப்பத்தை தணிக்கும் தர்பூ சணி பழங்களின் வரத்து இப்பகுதியில் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் கடலூர், திண்டிவனம், விழுப்பு ரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது. அதனால் பரமத்தி வேலூர், பர மத்தி பொத்த னூர், பாண்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அமோ கமாக விற்பனை நடை பெறு கிறது. தர்பூசணி பழங்க ளை பொது மக்கள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்ய ப்ப டு கிறது. ஒரு துண்டு தர்பூசணி பழம் ரூ.10 வரை விற்பனை ஆகிறது

Tags:    

Similar News