உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே தொடர் மழையால் கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்து 700 கோழிகள் பலி

Published On 2022-08-29 14:49 IST   |   Update On 2022-08-29 14:49:00 IST
  • தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கோழிப்பணைக்குள் புகுந்து 700-க்கும் மேற்பட்ட நடுத்தர கோழிகள் பலியானது.
  • இறந்து போன கோழிகளின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

சூளகிரி,

சூளகிரி தாலுகா கான லட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). இவர் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார்.

தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் கோழிப்பணைக்குள் புகுந்து 700-க்கும் மேற்பட்ட நடுத்தர கோழிகள் பலியானது. இறந்து போன கோழிகளின் மதிப்பு ரூ.1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

பண்ணையில் கோழிகள் இறந்த சம்பவம் பற்றி அறிந்த கிராம அலுவலர் செந்தில் மற்றும் ஊராட்சி மன்றதலைவர் ரத்தினம்மா கிருஷ்ணப்பா, பி.டி.ஓ. கோபாலகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் பலர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News