மது குடிக்கும் இடமாக மாறியுள்ள கால்நடை மருத்துவமனையை படத்தில் காணலாம்.
குடிமகன்களின் கூடாரமாக மாறிய கால்நடை மருத்துவமனை
- இரவு நேரங்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டி, புதூர், தாளநத்தம் உள்ளிட்ட சுற்று பகுதிகளி ல் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் கால்ந டைகளை சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை பெற அவர்களின் வசதிக்காக புட்டிரெட்டிப்பட்டி கூட்ரோடு அருகே கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது.
மருத்துவமனையின் சுற்று சுவர் இடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் அது சரி செய்யாததாலும் கேட் பூடப்படாத நிலையில் இருப்பதாலும் அந்த பகுதியை சேர்ந்த சிலர் அதனை மது குடிக்கும் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.