உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2023-04-02 15:17 IST   |   Update On 2023-04-02 15:17:00 IST
  • கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள தளிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சக்தி (33). கூலித் தொழிலாளி.

இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கடந்த 31-ம் தேதி தளிஹள்ளி தென்பெண்ணை ஆற்றின் கால்வாயில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News