உள்ளூர் செய்திகள்
குடிபோதையில் வாலிபரை தாக்கியவர் கைது
- குடிபோதையில் கிரனிடம் அன்னியாளம் அருகே தகராறில் ஈடுபட்டு கையால் தாக்கியுள்ளார்.
- போலீசார் மாதேஷ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே உள்ள அன்னியாளம் பகுதியை சேர்ந்தவர் கிரண்(வயது20), இவர் அந்த பகுதியில் மினிவேனில் பால் கொள்முதல் செய்து வருகிறார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிக்கண்ணா மகன் மாதேஷ் (34) என்பவர் குடிபோதையில் கிரனிடம் அன்னியாளம் அருகே தகராறில் ஈடுபட்டு கையால் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த கிரணை தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையில் சிக்சைக்கு சேர்த்தனர். இது குறித்து போலீசார் மாதேஷ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.