உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர் கைது

Published On 2023-03-14 15:40 IST   |   Update On 2023-03-14 15:40:00 IST
  • தாறுமாறாக வந்த கார் சென்டர் மீடினில் மோதி நின்றது.
  • போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இருந்து தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கிருஷ்ணகிரி வீட்டு வாரியம் சென்னை சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக தாறுமாறாக வந்த கார் சென்டர் மீடினில் மோதி நின்றது.

இதை அடுத்து போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அதகப்பாடி பகுதியைச் சேர்ந்த கௌதமபுத்திரன் (வயது 27 ) குடிபோதையில் இருந்து தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம புத்திரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News