உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பலி
- பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன்சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவர் வீட்டிற்கு தேவையான மளிகை ஜாமான்களை வாங்க நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பகண்டை கூட்ரோட்டிற்கு சென்றார். அப்போது திருக்கோவிலூர்- சங்கராபுரம் நெடுஞ்சாலையை வனபுற்று மாரியம்மன் கோவில் அருகே கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பார்த்திபன் பலத்த காயங்களுடன் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.