உள்ளூர் செய்திகள்

உடன்குடி அருகே 2 கிராமத்திற்கு ரூ.3 லட்சத்தில் குடிநீர் வசதி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டு

Published On 2023-10-19 08:37 GMT   |   Update On 2023-10-19 08:37 GMT
  • செட்டிவிளை, சிதம்பரபுரம் ஆகிய 2 கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.
  • அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், மாணிக்கபுரம் பகுதியில் இருந்து புதிய பைப்லைன் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் விஸ்தரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி யூனிய னுக்குட்பட்ட மானாடு தண்டுபத்து ஊராட்சி செட்டிவிளை, சிதம்பரபுரம் ஆகிய 2 கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.

எனவே அந்த பகுதிமக்கள் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இத்தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அந்த பகுதிமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு மாணிக்கபுரம் பகுதியில் இருந்து புதிய பைப்லைன் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் விஸ்தரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

இதன் தொடக்க விழாவிற்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் மாநாடு தண்டு பத்து ஊராட்சி தலைவர் கிருஷ்ண ம்மாள், துணைத்தலைவர் சுயம்புலிங்கம், தி.மு.க., செயலா ளர்கள் கோபால், சண்முகவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குடிநீர் வசதி ஏற்பாடு செய்த அமைச்சருக்கு 2கிராம மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News