உள்ளூர் செய்திகள்

கோவில் விழாவில், 48 கிலோ எடை கொண்ட பூ கரகத்தை சுமந்து இரவு முதல் காலை வரை, தொடர்ந்து ஆடியவாறு வலம் வந்த பூசாரியை படத்தில் காணலாம்.

பாகலூரில் திரவுபதி கரக உற்சவம்

Published On 2023-03-28 15:48 IST   |   Update On 2023-03-28 15:48:00 IST
  • 48 கிலோ எடை கொண்ட திரவுபதி அம்மன் பூங்கரகத்தை சூடாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பூசாரி சுமந்து நடனம் ஆடினார்.
  • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு களித்து மெய் சிலிர்த்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்ட விழா, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு திரவுபதி கரக உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி, அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல், 48 கிலோ எடை கொண்ட திரவுபதி அம்மன் பூங்கரகத்தை சூடாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பூசாரி சுமந்து நடனம் ஆடினார். தொடர்ந்து இடைவிடாது, காலை 10 மணி வரை பாகலூரின் முக்கிய வீதிகளிலும், சூடாபுரம் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வீடுகள் முன்பும் வலம் வந்து கரகம் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியை, பாகலூர், பேரிகை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு களித்து மெய் சிலிர்த்தனர்.

Tags:    

Similar News