உள்ளூர் செய்திகள்

அருவங்காடு கிளை நூலகத்தில் வரையாடு தினம் அனுசரிப்பு

Published On 2023-10-08 08:37 GMT   |   Update On 2023-10-08 08:37 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளதாக தகவல்
  • வரையாடுகளின் வாழிடத்தை பாதுகாத்து மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை

ஊட்டி,

அருவங்காடு கிளை நூலகத்தில் தமிழக வரையாடு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளைமாவட்ட வாசகர் வட்டம் செய்திருந்தது.

நிகழ்ச்சியில் ஓங்கில் இயற்கை அறக்கட்டளை நிறுவனர் ஆசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்கவும், வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டம் சுமார் 25.14 கோடி செலவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 3122 வரையாடுகள் உள்ளன. அவை 1500 மீட்டர் உயரத்திற்கும் மேல் உள்ள மலைகளில் மட்டும்தான் வாழும். அந்நிய களைச்செடிகள் ஆக்கிரமிப்பு, காட்டுத்தீ ஆகியவை காரணமாக புல்வெளி பரப்புகள் மிகவும் குறைந்து உள்ளதால் வரையாடுகளின் வாழிடம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை மேம்படுத்த வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முடிவில்நூலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Tags:    

Similar News