இரட்டை மாட்டுவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.
பென்னிகுக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கூடலூரில் 7 பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
- கர்னல்ஜான்பென்னிகுக் 182-வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
- இளம்ஜோடி, புள்ளி மான், தட்டான்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு ஆகிய 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
கூடலூர்:
முல்லைபெரியாறு அணையை கட்டிய கர்னல்ஜான்பென்னிகுக் 182-வது பிறந்த நாள்விழாவை முன்னிட்டு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது. 3-ம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜிவ் முன்னிலை வகித்தார்.
இளம்ஜோடி, புள்ளி மான், தட்டான்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்மாடு, நடுமாடு ஆகிய 7 பிரிவுகளில் போட்டிகள் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் நடத்த ப்பட்டது. மந்தைவாய்க்கால் பாலம் முதல் பென்னிகுக் மணிமண்டபம் வரை பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டி ருந்தது. ஒவ்வொரு பிரிவி லும் முதல் 3 இடங்களை பிடித்த காளைகளுக்கும், அதன் உரிமையாளர்களு க்கும் பரிசுகள் வழங்க ப்பட்டது.
போட்டியை காண சாலையில் இருபுறமும் ஏராளமான பார்வை யாளர்கள் நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை 5 மாவட்ட விவசாயி கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.