உள்ளூர் செய்திகள்
காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தி.மு.க. சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- அன்பழகன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- துரை, கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம்,
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி உள்ளிட்ட இடங்களில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் பேராசிரியர் அன்பழகன் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சண்முகம், மாதையன், சித்ரா வடிவேல், மாவட்ட பிரதிநிதி சங்கர், நிர்வாகிகள் பானுகுமார், சின்ராஜ், துரை, கணேசன் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.