உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஓசூரில் தி.மு.க. உட்கட்சி தேர்தல்

Published On 2022-06-16 14:25 IST   |   Update On 2022-06-16 14:25:00 IST
  • தி.மு.க.வினரின் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
  • 500-க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

ஓசூர்,

தி.மு.க.வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்ட ஒசூர் ஒன்றியம் உள்பட ஒன்றியத்திற்கான 15-வது உட்கட்சி தேர்தலில், அவைத்தலைவர், ஒன்றிய செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோருக்கு, விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி, ஓசூரில் தளி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், தலைமை கழக ஆணையாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் தலைமை தாங்கி, விண்ணப்ப படிவங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

மேலும் இதில், மாநகர பொறுப்பாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா,மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News