உள்ளூர் செய்திகள்

ராஜா எம்.எல்.ஏ. 

சங்கரன்கோவிலில் நாளை தி.மு.க. செயற்குழு கூட்டம் - ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை

Published On 2023-03-24 08:56 GMT   |   Update On 2023-03-24 08:56 GMT
  • தி.மு.க. செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி மகாலில் நடைபெறுகிறது.
  • கலைஞர் 100-ம் ஆண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள ஜெய்சாந்தி மகாலில் நடைபெறுகிறது.

இதில் அணி அமைப்பா ளர்கள் அமைத்தல், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல், இணையதளம் மூலமாக இயக்கத்தின் கொள்கைகள், திட்டங்களையும் மக்கள் இடையே கொண்டு சேர்த்தல், கலைஞர் 100-ம் ஆண்டு விழாவை ஓராண்டு காலம் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

எனவே இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News