கே.டி.சி. நகரில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை வரவேற்க திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.
மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வரவேற்ற காட்சி.
பாளை கே.டி.சி.நகரில் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
- தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்லை:
தி.மு.க. மாநில இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் கார் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் புறப்பட்டு சென்றார். வழியில் பாளை கே.டி.சி.நகரில் அவருக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் சுதா மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, கோபி என்ற நமச்சிவாயம்,
கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞரணி ஆறுமுகராஜா, தி.மு.க. இளைஞரணி செயலளர் வில்சன் மணிதுரை, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பாளை யூனியன் சேர்மன் கே.எஸ்.தங்கபாண்டியன், பொரு ளாளர் வண்ணை சேகர், நிர்வாகிகள் மணிகண்டன், மேகை செல்வன், சிவா, வினோத், சங்கர், மைதீன், வக்கீல் அருள் மாணிக்கம், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், ரவீந்தர், உலகநாதன், கிட்டு மற்றும் மணி, மாநகர இளை ஞரணி துணை அமைப்பாளர் மாயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.